திருத்துறைப்பூண்டி ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலய 81 ஆம் ஆண்டு பங்குனி மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நகரில் ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் 81ஆம் ஆண்டு பங்குனி மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஒரு வார காலம் விரதம் இருந்த பக்தர்கள் இன்று தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி காலை முதலே பால் குடங்கள் காவடிகள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் ஆலயம் எதிரே வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர் ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி பால்குடங்களுடனும், கை குழந்தைகளுடனும், அழகு காவடி, மயில் காவடிகளுடனும், தீக் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதில் 500மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் தீயணைப்பு துறையினர் மற்றும் கோயில் செயல் அலுவலர் முருகையன் கோவில் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கோவில் நிர்வாகிகள் மருளாளிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலய பங்குனி 81 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது