தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் பெருமை உடைய கோவிலாகும் இங்கு ராஜகோபால சுவாமிக்கு பங்குனி மாதம் ஒரு மாதம் நடைபெறும் விழா சிறப்புக்குரிய ஒன்றாகும் அதிலும் 18 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் நாள்தோறும் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் பங்குனி திருவிழாவில் தொடக்கமாக கொடியேற்ற நிகழ்ச்சி நாளைய தினம் காலை 10: 30 மணிக்கு மேல் 11: 30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெற உள்ளது.