திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி. எஃப். பிரதாப் சந்த் லுங்கட் அவர்களின் நினைவாக இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் வழங்கும் முகாம் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் குஜராத், சத்திஸ்கர், நேபால், போன்ற நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், நெல்லை, தூத்துக்குடி, சென்னை, சேலம் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கடந்த நான்கு நாட்களில் 550 பயனாளிகளுக்கு எலக்ட்ரானிக் கைகள் பொருத்தப்பட்டது. தலா 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான இலவச எலக்ட்ரானிக் கைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினர். எடை குறைவான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை கைகள் மூலம் கைகளை இழந்தோர் தண்ணீர் பருகுதல், தலை சீவுதல், காய்கறி நறுக்குதல், மண்வெட்டிகளை கையாளுதல் போன்ற அன்றாட பணிகளை மேற்கொள்வதால் செயற்கை கைகளை பொருத்துக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலத்தைச் சேர்ந்த விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த பயனாளி சசிகுமார் செயற்கை கைகளை பொருத்திய பின் அளித்த பேட்டியில் பேருந்து விபத்தில் எனக்கு இரண்டு கைகளும் இழந்த நிலையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரானிக் செயற்கை கைகள் மூலம் உணவு உண்ணுதல் தலைசுதல் உடைகள் மக்கள் உடை மாற்றுதல் போன்ற அன்றாட பணிகளை எளிதாக செய்ய முடிகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.