செம்பியன்கூந்தலூர் மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

78பார்த்தது
குடவாசல் வட்டம் செம்பியன் கூந்தலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ரேணுகா மகாகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பியன்கூந்தலூரில் உள்ள கிராம தேவதைகளான ஸ்ரீ ரேணுகா மகா காளியம்மன், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ சட்டைக்காரசாமி ஆலயங்கள் புனரமைக்கப்பட்டது.
முன்னதாக, 09 ஆம் தேதி காலை விநாயகர் வழிபாடு, கோபூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, பூமிதேவி பூஜை நடைபெற்ற பின் முதல் கால பூஜை தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று 10 ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்துபரிவார தெய்வங்களான சித்தி விநாயகர், ஸ்ரீ ஐயனார்,
ஸ்ரீ சாட்டைக்கார சுவாமி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய
கடங்கள் அருள்மிகு ரேணுகா காளியம்மன் ஆலய விமானம் சென்றடைந்து 10. 20
மணியளவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவரான ரேணுகா மகா காளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி