பாபநாசம் - Papanasam

தஞ்சை: பீகாரரை சேர்ந்த தாய் மற்றும் குழந்தை மீட்பு

தஞ்சை: பீகாரரை சேர்ந்த தாய் மற்றும் குழந்தை மீட்பு

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னி (வயது 30) மற்றும் அவரது 6 மாத பெண் குழந்தை ஆகிய இருவரும் பாபநாசம் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக அமர்ந்திருப்பதை அங்கு உள்ளவர்கள் பார்த்துள்ளனர். அதனால் பாபநாசம் ரயில் நிலைய வணிக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தலின் பேரில் சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் குழந்தைகள் காப்பகம் மற்றும் பாதுகாப்பாகத்தின் 1098 மேற்பார்வையாளர் அஜித்தா, கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமை காவலர் சதீஷ்குமார், கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் அங்கு விரைந்து வந்து ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தையை மீட்டு தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளித்து தஞ்சாவூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அப்போது தாய் மற்றும் குழந்தைக்கு பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத்பைரன், கீர்த்திவாசன் ஆகியோர் முன்னிக்கு தேவையான புடவை, குழந்தைக்கு தேவையான ஆடைகள் மற்றும் போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும் தாய் மற்றும் குழந்தைக்கு பொருட்கள் வழங்கி உதவி செய்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా