கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் சனிக்கிழமை குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயமானதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் 1 சேகர் மகன் கோபாலகிருஷ்ணன் ( 30). தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பர்களுடன் சோலையப்பன் தெருவில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி நீந்தி கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் சிறிது நேரத்தில் காணவில்லை.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கும்பகோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் காற்றடைக்கப்பட்ட பலூன்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் இறங்கி பல்வேறு திசைகளில் கோபாலகிருஷ்ணனை தேடி இரவு நேரமானதால் கைவிட்டனர். இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.