கபிஸ்தலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்டக்குடி நெல் குடோன் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஆதனூர், பாரதிதாசன் தெருவை சேர்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (வயது 39) என்பதும் அவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. பிரகாசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.