டெல்லி வசந்த் கஞ்ச் பகுதி சாலையில் வந்த SUV காரை 2 போக்குவரத்து காவலர்கள் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்ற நிலையில் அதை நிறுத்த 2 காவலர்களும் காரின் பேனட்டை பிடித்துள்ளனர். அப்போதும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் காவலர்கள் இருவரும் சாலையில் இழுத்துச்செல்லப்பட்டனர். மேலும் காரின் வேகம் கூடிய நிலையில் அவர்கள் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதையடுத்து, கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.