மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் கண்ணீர் விட்டு கோரிக்கை

69பார்த்தது
பாபநாசத்தில் விவசாயி பாசன வாய்க்கால் வேண்டி மனு கொடுக்கும் முகாமில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் கண்ணீர் விட்டு கோரிக்கை சிறிது நேரம் பரபரப்பு.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தன் விவசாய நிலத்திற்கு பாசன வாய்க்கால் அமைத்து தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மனு கொடுக்கும் முகாமில் கரம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வயது 51, கவிதா மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 41 சென்ட் பாசன நிலத்திற்கு நீர் கிடைக்காததால் பாசனத்திற்கு மிகவும் சிரமப்படுகிறோம் மேலும் பாசன வாய்க்கால் தங்களுக்கு தமிழக அரசு ஏற்படுத்தி தருமாறும் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அளவில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் மனு கொடுத்து மேடை அருகிலேயே கீழே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயியால்.
முகாமில் பரப்பரப்பு ஏற்பட்டது.
விவசாயியின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கண்ணீர் விட்டு அழுத காட்சி மனு கொடுக்க வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி