2026 சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என தவெக தலைவர் விஜய்யிடம், கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. செயற்குழு கூட்டத்திற்கு பின் அனைத்து நிர்வாகிகளையும் தனித்தனியே அழைத்து விஜய் பேசியுள்ளார். அப்போது, பல நிர்வாகிகள் முதல் தேர்தலிலேயே கூட்டணி என்றால் தவெகவின் செல்வாக்கு என்ன என்பது தெரியாமலேயே போய்விடும். அதனால், தனித்துப் போட்டியிடலாம்" என ஆலோசனை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.