கும்பகோணம் எம்எல்ஏ நேரில் ஆய்வு

52பார்த்தது
. கும்பகோணம் அரசலாறு இருந்து பிரிந்து பல்வேறு தெருக்கல் வழியாக ஓடும் ஓலைப்பட்டினம் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த வாய்க்காலை தூர்வார வேண்டுமென சமூக ஆர்வலர் மற்றும் பகுதி மக்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை எடுத்து வாய்க்கால் முழுவதும் சீரமைக்க குழு 60 கோடி மதிப்பீட்டில் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக சுமார் 14 கோடி தூர்வாரம் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த பணி தற்போது நடைபெற்றுள்ள நிலையில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் வாய்க்காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வாய்க்கால் பணிகளை தரமாகவும் உரிய அறிவிப்பின்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும் விரைவில் அந்த வாய்க்காலில் இருபுற நிலையும் சாய்வு தளமும் தரையில் சிமெண்ட் கான்கிரீட் தரவும் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தார். அருகில் மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப. தமிழழகன் , மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் டி கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் மாமன்ற உறுப்பினர் டி ஆர் அனந்தராமன் , மாநகராட்சி துணை செயலாளர் ப்ரியம் சசிதரன் , மாவட்ட இணையதள துணை அமைப்பாளர் காளிதாஸ் , குவைத் ஸ்ரீதரன் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி