பாபநாசம் ஆளில்லா கடை திறப்பு

63பார்த்தது
பாபநாசத்தில் 156 ஆண்டு காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாபநாசம் ரோட்டரி சங்கம் நடத்தும் ஆள் இல்லா கடை திறக்கப்பட்டது.




தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 156 ஆண்டு காந்தி ஜெயந்தி முன்னிட்டு ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் காந்தி ஜெயந்தி தினத்தில் ஆள் இல்லா கடையைத் திறப்பது வழக்கம். அதேபோல் இன்று 25 ஆம் ஆண்டு முன்னிட்டு பாபநாசம் பேருந்து நிழல்குடையில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார் முன்னாள் மண்டல உதவி ஆளுநர் சரவணன், மண்டல உதவி ஆளுநர் அறிவழகன் பப்ளிக் இமேஜ் தலைவர் விக்னேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஆளில்லா கடையை முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேலு முதல் விற்பனையை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி