பாபநாசத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட மனு கொடுக்கும் முகாமில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, கும்பகோணம் கோட்டாட்சியர் ஹிருத்யா எஸ். விஜயன் ஆகியோர் பங்கேற்று மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பூதலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பகுதி 40 வயது மதிப்புத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி இருந்த நிலையில் இவரைக் கண்டவுடன் உடனடியாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உதவியுடன் தஞ்சாவூர் ராசு மிராசுதார் மருத்துவமனை இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான அரசர் சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என சமூக ஆர்வலர்கள் மூலம் தெரிந்து கொண்டார். உங்களில் அவர் ஆந்திர மடலம் அனந்தபூர் மாவட்டம் அம்மாவாரி பள்ளி கிராமத்தைச் சார்ந்த குஜாலா பிரசாத் என காவல்துறை மூலம் உறுதி செய்யப்பட்டு இன்று பாபநாசத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் திட்டம் முகாமில் அவரின் குடும்பத்தார்களை வரவழைத்து புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் திருமதி சித்ராதேவி மற்றும் பலர் உடன் இருந்தனர்