திருத்தணி அருகே கே. ஜி. கண்டிகையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழை நீர் வடிவு கால்வாய் பணிகள் வியாபாரம் பாதிக்கிறது வீட்டிலிருந்து மருத்துவ தேவைகளுக்கு செல்ல முடியவில்லை விரைந்து பணிகள் முடிக்கவில்லை என்றால் சாலை மறியல் மேற்கொள்வோம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்த வியாபாரிகள்.
திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி அருகே வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கே. ஜி. கண்டிகை என்ற ஊராட்சியில் பஜார் பகுதியில் மழை நீர் வடிவுக்கால்வாய் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடைபெற்று வருகிறது
ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்காமல் ஆமை வேகத்தில் 20 நாட்களுக்கு மேலாக பணிகள் முடிக்காமல் வைத்துள்ளனர்
கால்வாய் பணிகளுக்காக பள்ளங்கள் 15 அடிகளுக்கு மேல் நோண்டப்பட்டு கட்டுமான கம்பிகள் கட்டப்பட்டுள்ளது
இதனால் இந்த பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட குடும்பமாக வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் அவசர தேவைகளுக்கு மருத்துவ தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர