மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது இதில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குழந்தைகளின் பாதுகாப்பு பொது சுகாதாரம் இலவச வீட்டு மனை பட்டா பேரூராட்சிகள் துறை கனிமவளத் துறை நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து விவாதித்தனர் இதில் பேசிய எம் பி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் விதிகளை தளர்த்தியுள்ளதால் ஒரு லட்சம் பேருக்கு பெல்ட் ஏரியாவில் பட்டா வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார் தற்போது மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண பஞ்சாயத்துகள் இயங்காததால் அதிகாரிகளை மக்கள் தொடர்பு கொள்ள ஹெல்ப் லைன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அதை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி