ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுமார் 800 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டிருந்தது. பருவம் தவறிய மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மிளகாய் பயிர் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பரில் காட்டாற்று வெள்ளத்தால் மிளகாய் பயிர்கள் மூழ்கின. இந்த நிலையில், ஜனவரி மாதம் நடவு செய்யப்பட்ட மிளகாய் பயிர்களும் தற்போது சேதமடைந்துள்ளதாக கூறுகின்றனர். இதனால், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.