பெண் காவல் உதவியாளர் விபத்தில்பலி: உடலை ஒப்படைப்பதில் சிக்கல்

58பார்த்தது
திருத்தணி அருகே மினி லாரி இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மெர்சி சடலத்தை உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது தங்களுக்கு தான் இறுதி சடங்கு செய்ய உரிமை உண்டு எனவே உடலை ஒப்படைக்க வேண்டும் என சண்டையிட்டதால் உடற்கூறு ஆய்வு செய்ய முடியாமல் சடலத்தை மருத்துவமனை உடற்கூறாய்வு அறையில் வைத்துச் சென்ற போலீசார் உறவினர்கள்
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு அரை முன்பு சடலத்தை கேட்டு உயிரிழந்த பெண் உதவி ஆய்வாளர் மெர்சியின் கணவர் தாஸ் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பும் தனது இரண்டு குழந்தைகளுடன் பெண் உதவி ஆய்வாளர் மெர்சி வசித்து வந்த தாய் வீட்டார் தரப்பும் மெர்சியின் சடலத்தை இறுதிச் சடங்கு செய்வதற்கு உடலை கேட்டு வாக்குவாதம் செய்து கொண்டதால் யாரிடம் உடலை ஒப்படைப்பது என்று குழப்பத்தில் காவல்துறையினர் தவித்தனர் இதனிடையே நாளை வருவாய்த் துறையினர் இப் பிரச்சனையில் தலையிட்டு தங்களுடன் வசித்து வந்த மகள் மெர்சியின் சடலத்தை தங்களது பேத்தி மற்றும் பேரன் ஆகிய இரண்டு குழந்தைகள் நலன் கருதி இறுதி சடங்கு செய்ய ஒப்படைக்க வேண்டும் என காவல்துறையினரிடம் மெர்சியின் தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்தார் இதனை மெர்சியின் கணவர் ஏற்காததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :