திருவள்ளூர் வைத்திய வீரராகவர் சுவாமி கோவில் திருக்குளமான ஹிருதப நாசினி நோய் தீர்க்கும் புனித தீர்த்தமாக கருதப்படும் குளத்தில் பக்தர்கள் தங்களது நோய் தீர வேண்டி வெள்ளம் உப்பு நேர்த்திக்கடன் கோவிலின் செலுத்தி குளத்தில் புனித நீராடினால் நோய் தீரும் என்ற ஐதீகம் நிலவி வருகிறது இக்கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து புனித நீராடி செல்வர் இந்த நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் கோவிலுக்கு வந்து தர்ப்பணம் செலுத்தும் பொழுது அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் தர்ப்பண பொருட்கள் இவைகளை இருதய நாசினி குளத்தில் போட்டு விடுவதால் குளம் சீரடைந்து வருகிறது மேலும் பல கோடி ரூபாய் செலவில் கடந்த அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்ட இத்திருகுளம் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரப்பி வரும் அவல நிலை காணப்படுகிறது இதனை கோவில் நிர்வாகமும் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகமும் உரிய முறையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் குளத்தைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் இவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் நோய் பரப்பி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்