மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: பரபரப்பு தீர்ப்பு

71பார்த்தது
திருத்தணி அருகே மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் முருகன் என்பவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்
இந்த வழக்கு 2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது
இதன் பிறகு இந்த வழக்கு திருவள்ளூர் மகிலா போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது 5 வருடங்களுக்குப் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட முருகன் வயது (37) இவருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார், திருவள்ளூர் மகிலா நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி இதனைத் தொடர்ந்து குற்றவாளி முருகனை போலீசார் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி