சென்னை: "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டும்" என பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வலியுறுத்தியுள்ளார். மேலும், "சண்டைக்கும் நாங்கள் தயார், சமாதானத்திற்கும் நாங்கள் தயார். தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தோம். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் அளவிற்கு தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இனி எந்த தொழிலையும் செய்யாதீர்கள்" என கேட்டுக்கொண்டார்.