சாலை முறையாக போடாததால் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிதாக சாலையை தரமாக அமைக்க ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
சாலை குறித்து எனக்கே கதை சொல்லாதீர்கள் ஆய்வுக்கு வந்த ஆட்சியர் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளை அலறவிட்டார்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஊத்துக்கோட்டை அத்தங்கி காவனூர் பாலவாக்கம் நெமிலயகரம் சிறுவானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
அத்தங்கி காவனூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலை முறையாக அமைக்கப்படாததால் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் களிடம் எனக்கே கதை சொல்லாதீர்கள்
ஒப்பந்ததாரரை மாற்றி சாலையை தரமாக அமைக்க அறிவுறுத்தினார் மேலும் ஊத்துக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில்
மாணவர்களின் கல்வித் திறனை கேட்டறிந்தார், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டு மிளகு முட்டையை உண்டு பார்த்து சரியாக அதனை வேக வைக்க வேண்டும் என அங்கிருந்த சமையலரிடம் அறிவுறுத்தினார்
ஊத்துக்கோட்டை பகுதியில் பள்ளி செல்லும் நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதாலும் சாலையோர கடைகளாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினரை ஆட்சியர் அறிவுறுத்தினார்