திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்
இந்த திருக்கோயிலில் வார விடுமுறையை முன்னிட்டு
சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தெலுங்கானா மாநிலம், போன்ற பகுதியிலிருந்து பக்தர்கள் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய கடும் வெயிலில் நூறு ரூபாய் கட்டண வழி தரிசனம் மற்றும் பொது வழி தரிசனத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
மேலும் சாமி தரிசனம் செய்ய அதிகளவு பக்தர்கள் மலைக்கோவில் திரண்டு உள்ளதால் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் வாடகை வாகனங்களில் வந்துள்ளதால் மலைக்கோயில் முதல் மலை அடிவாரம் வரை போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது
பக்தர்கள் ரயில் நிலையத்திலிருந்து மலைக் கோயிலுக்கு வருவதற்கு இப்போதைய பேருந்து வசதிகளை திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு வரும் காலங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் இந்து சமய அறநிலைத்துறைக்கு கோரிக்கை முன் வைத்துள்ளனர்.