பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படும் என பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 01) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிவு செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவிகிதம் குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரையுள்ள மதிப்பிலான அசையா சொத்துக்களுக்கு இது பொருந்தும். தமிழக அரசின் அரசாணையை அடுத்து புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.