நெல்லை மாவட்டம் சமூகநெங்கபுரம் ஊராட்சியில் தூய்மை பணியாளர் இசக்கி தூய்மை பணியில் ஈடுபட்ட போது கீழே கிடந்த 7000 ரூபாய் பணத்தை எடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். தூய்மை பணியாளர் இசக்கியின் இந்த மனிதநேய செயலை இன்று காவல் ஆய்வாளர் சகாயராஜ் ராபின் ஷாலு வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்வின்போது ஏராளமானோர் கலந்து கொண்டனர்.