ஓட்டப்பிடாரம் - Ottapidaram

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை: கனிமொழி

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை: கனிமொழி

எப்போதும்வென்றான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். ஓட்டாபிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும்வென்றான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து, உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். கனிமொழி எம்பி பேசும்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள் ஆகையால், தகுதியான அனைத்து மகளிருக்கும் விரைவில் வழங்கப்படும். உங்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் இங்கு வந்துள்ளோம். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా