கிராம சபை கூட்டத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் புறக்கணிப்பு

75பார்த்தது
கிராம சபை கூட்டத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் புறக்கணிப்பு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடைபெற்ற கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். கோரம்பள்ளம் பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் விவாதங்கள் எதுவுமே நடைபெறாமல் பெருவாரியான கல்லூரி மாணவர்களையும் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து மட்டுமே தீர்மானம் புத்தகத்தில் கையெழுத்தை மட்டும் பெற்றுள்ளார்கள்.

கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு இதுவே போதுமானது என்றால் பொதுமக்கள் எதற்கு? விவாதங்கள் எதற்கு? மினிட்ஸ் புத்தகம் எதற்கு? அரசு சார்ந்த மற்ற அதிகாரிகள் எதற்கு? தீர்மானத்தை வாசிக்கும் போது கூட பலருக்கு கேட்கவில்லை? வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாமலேயே கிராம சபை தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? சாத்தியம்தான் என்பதைப் போல கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தை நடத்தி முடித்து விட்டார்கள். மீண்டும் கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றத்தை தான் நாட வேண்டுமா? என்று சமூக ஆர்வலர் ச. பாலா என்ற பாலசந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி