கனிமொழி குறித்து அவதூறு பதிவு: எஸ்பி யிடம் மநேமக புகார் மனு

54பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏரல் பகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வாகனத்தின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த தொண்டர்களை நிறுத்தி ஏன் தலைக்கவசம் அணியவில்லை என கேள்வி எழுப்பியதோடு தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கி அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறி அவர்களுடன் இணைந்து தனது குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படத்தை கனிமொழி கருணாநிதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இளைஞர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்திற்கு மகாகவுதம் என்ற நபர் x வலைதள கணக்கில் அவதூறாக கருத்து பதிவு செய்திருக்கிறார். இதை தொடர்ந்து அந்த கருத்தை நீக்கும்படி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அதே பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் இந்த நிலையில் அவரது பதிவிற்கும் அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளார் எனவே சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவு செய்யும் நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகுமது இக்பால் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜானிடம் மனு அளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி