ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் முற்றுகை: பரபரப்பு!

59பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மாவட்டம் முழுவதும் 85 ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய மற்றும் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து இறக்கும் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னா், அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் ஊராட்சி துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விடுமுறை நாள்களில் பணியாளா்களை பணிக்கு அழைத்து சிரமப்படுத்தக்கூடாது. முதல்வரின் காலை உணவு திட்டம் சம்பந்தமான பதிவேடுகளை சத்துணவு துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி