ஓணம் பண்டிகை; பூக்களின் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

50பார்த்தது
தூத்துக்குடி ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி மாத கடைசி சுப முகூர்த்த தினம் நாளை நடைபெற உள்ளதால் தூத்துக்குடி பூ சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து மல்லிகைப்பூ கிலோ 1700 ரூபாய் வரையும் பிச்சிப்பூ 1500 ரூபாய் வரையும் திருமணத்திற்கு அணிவிக்கப்படும் ரோஜா இதழ் மாலை ரூபாய் 6000 வரை விற்பனை


நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது மேலும் ஆவணி மாத கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் நாளை ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன இதன் காரணமாக தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது தூத்துக்குடி பூச்சந்தைக்கு பேருரணி ஓசனூத்து அருப்புக்கோட்டை சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 1700 ரூபாய் வரையும் 400 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று கிலோ 1500 ரூபாய் வரையும் திருமண நிகழ்ச்சிக்கு மணமக்களுக்கு அணிவிக்கப்படும் ரோஜா இதழ் மாலை ரூபாய் 5500 ல் இருந்து 6000 ரூபாய் வரையும் விற்பனையாகிறது

இதேபோன்று சென்டுபூ ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி