விலையில்லா தையல் மிஷின் வழங்கிய அமைச்சர்

58பார்த்தது
விலையில்லா தையல் மிஷின் வழங்கிய அமைச்சர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (01. 10. 2024), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தெரிவிக்கையில், பெண்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற பெண்களுக்கு விலையில்லா மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் மற்றும் எம்பிராய்டு தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் கொடுப்பதன் முக்கிய நோக்கமே அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு உதவியாக அமையும் என்பது தான். பெண்கள் தையல் பயிற்சி கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல் தற்போது உள்ள சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வணிக ரீதியிலான அடிப்படையில் எம்பிராய்டு போன்ற பயிற்சியெல்லாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி