நம்மில் பலரும் இரவு நேரங்களில் பரோட்டவை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால், பரோட்டாவில் செரிமானத்திற்குத் தேவையான நார்ச்சத்து இல்லாததால், இரவு நேரங்களில் சாப்பிட்டால், ஜீரணமாக அதிக நேரம் எடுக்கிறது. அதேபோல், சிலருக்கு மலச்சிக்கலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனால் தான், இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், தினமும் பரோட்டா சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.