சாம்சங் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு மறியல் போராட்டம்

82பார்த்தது
சாம்சங் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு மறியல் போராட்டம்
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசியல் சாசனப்படி சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்து 90 நாட்களுக்கு மேலாகியும் இனியும் இழுத்தடிக்காமல் தமிழக அரசு உடனடியாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு வை சேர்ந்த தொழிலாளிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட தலைவர் இரா. பேச்சிமுத்து தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் ஆர். ரசல் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். இந்த போராட்டத்தில் மாநில குழு உறுப்பினரும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ஆர் கிருஷ்ணவேணி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரா, மாவட்ட தலைவர் ஜெபராணி, கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் காசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டதில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி