இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகளை பறிமுதல்;

67பார்த்தது
தூத்துக்குடி தருவைகுளம் அருகே இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 7-லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடல் வழியாக கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா, போதை பொருட்கள், போன்றவைகளும் அதைபோல் பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு வந்தாலும் கூட தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் தருவைகுளம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் தருவைகுளம் அருகே சாலையில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் 35 -கிலோ வீதம் 37- மூடைகளில் பீடி இலை பண்டல்கள் இருந்தது. இதனை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்துடன் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி