வடகிழக்கு தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி!

59பார்த்தது
தூத்துக்குடி மழை வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் குளம் உள்ளிட்டவைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு மீட்டு அவர்களுக்கு முதல் உதவி அளிப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ளது இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாப்பு பாதுகாத்து கொள்வது குறித்து தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஒத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன


அந்த வகையில் தூத்துக்குடி நகர தீயணைப்பு துறை சார்பில் தீயனைப்பு நிலைய அலுவலர் முருகையா தலைமையில் தீயணைப்புத் துறையினர் தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் தெப்பக்குளத்தில் மிதவை படகுமூலம் மழை வெள்ள காலங்களில் வெள்ள பகுதி மற்றும் ஆறு ஏரி குளம் ஆகியவற்றில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பொதுமக்கள் மழை வெள்ள காலங்களில் தங்களை காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம் தீயணைப்பு துறை வீரர்களால் செய்து காண்பிக்கப்பட்டது

மேலும் தண்ணீரில் மூழ்கியவர்களை எவ்வாறு மீட்பது அவர்களை மீட்டு முதல் உதவி சிகிச்சை எவ்வாறு அழிப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி