2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

61பார்த்தது
தூத்துக்குடி மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கேரிப்பை மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர் ஸ்ட்ரா போன்ற பொருட்களை வெளியூரிலிருந்து கொண்டு வந்து தூத்துக்குடி வியாபாரிகளை குறித்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மடத்தூர் சாலையில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது முருகேசன் நகர் பகுதி அருகே விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வந்த ஸ்பீடு பார்சல் சர்வீஸ் என்று எழுதப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

இதில் இந்த சரக்கு வாகனத்தில் ஸ்பீடு பார்சல் சர்வீஸ் என்ற பெயரில் தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ராசி பிளாஸ்டிக் நிறுவனம் சார்பில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கேரிபை ஒரு முறை பயன்படுத்தப்படும் டம்ளர் மற்றும் ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சரக்கு வாகனத்தையும் சரக்கு வாகனத்தில் இருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி