பெரியார் பிறந்தநாள்; மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை!

55பார்த்தது
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினார்கள் சமூக நீதி உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்

தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது அந்த வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன்
ஆகியோர் தலைமையில் ஏராளமான திமுகவினர் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தொடர்ந்து திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு பல தூவி மரியாதை செலுத்திய மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினர்
சமூக நீதி நாள் உறுதிமொழியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you