சூரிய ஒளி மூலம் இயங்கும் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை பாரதிய விகாஸ் டிரஸ்ட் மணிப்பால் கர்நாடகா மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பழங்குடி மக்கள் மற்றும் திருநங்கை சமுதாய மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சூரிய ஒளி மூலம் இயங்கும் தையல் இயந்திரம் மற்றும் ப்ரீசர் பாக்ஸ் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் இன்று (செப் 20) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இறுதியில் பாரதிய விகாஸ் டிரஸ்ட் மணிப்பால் மகேஷ் நன்றி கூறினார்.