வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் காட்சிகள் திரையிடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், லைகா தமிழ் சினிமாவில் முதன்முதலில் தயாரித்தது, கத்தி படம்தான். இதன் காரணமாக, வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் கத்தி படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவம் ரஜினி ரசிகர்களை கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளது.