

தமிழ் புத்தாண்டு.. ரஜினி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் (Video)
மதுரை: திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் நடிகர் ரஜினி மீது கொண்டுள்ள அபிமானத்தில் 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்' ஒன்றை உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட ஆறு வகையான பொருட்களை கொண்டு ரஜினி சிலைக்கு கார்த்திக் அபிஷேகம் செய்தார். பொங்கலும் வைத்து வழிபட்டார். நன்றி: தந்தி