
இரவு நேர திருடர்களால் விவசாயிகள் பாதிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது 10 ஏக்கருக்கு கீழ் கொடிக்கால் விவசாயம் செய்து வருகின்றனர். கொடிக்கால் விவசாயத்தின் ஊடுபயிராக மருத்துவ குணங்கள் கொண்ட அகத்திக் கீரைகளை உற்பத்தி செய்தும் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வரும் இந்த விவசாயிகளின் வாழ்வில் இரவு நேர திருடர்களால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.