தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
தேனி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று (அக். 29) திருநெல்வேலி ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், ஆர். டி. ஓ. , தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 180 பேர் பணிக்கு வரவில்லை.