பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று வேளையில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 9வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து அறிவித்துள்ளனர். மேலும் கும்பக்கரை ஆற்றுக்குள் பொதுமக்கள் யாரும் குளிக்கவும் துணி துவைக்கவும் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர்.