கும்பக்கரை அருவியில் 8வது நாளாக தடை

55பார்த்தது
பெரியகுளம் அருகே 8 கி. மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவியில் குளிப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது வடகிழக்கு பருவ மழையையொட்டி தொடர் மழையால் இன்று(அக். 27) 8வது நாளாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லவும் குளிக்கவும் தடை விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி