சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, இந்தியாவிலேயே 309 ஆண்டுகள் பழமையான பள்ளியாக விளங்குகிறது. 1715-இல் கிழக்கிந்திய நிறுவனத்தால் அதன் ஊழியர்களின் குழந்தைகளுக்காக பள்ளி திறக்கப்பட்டது. இப்பள்ளியின் 309-வது ஆண்டு பரிசளிப்பு விழாவில் நேற்று (அக். 29) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.