திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

கும்பகோணம்: அமைச்சர், எம். பி., எம். எல். ஏ., அலுவலகங்களை முற்றுகையிட முடிவு

கும்பகோணம்: அமைச்சர், எம். பி., எம். எல். ஏ., அலுவலகங்களை முற்றுகையிட முடிவு

கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என 2019 ஆம் ஆண்டிலிருந்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பேன் என்று தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்தார். ஆனால் 1500 நாட்களைக் கடந்தும் இன்று வரை கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காதது இப்பகுதி மக்களை ஏமாற்றுகின்ற வகையில் அமைந்துள்ளது. மேலும் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அலுவலகம் முன்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் தலைமையிலும், பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் கல்யாணசுந்தரம் அலுவலகம் முன்பு போராட்ட குழுவினர் சதீஷ்குமார் தலைமையிலும், உயர்கல்வித்துறை அமைச்சர் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் அலுவலகம் முன்பு போராட்டக் குழுவினர் குடந்தை அரசன் தலைமையிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా