திருநாகேஸ்வரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம்
திருநாகேஸ்வரத்தில் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் செம்மங்குடி முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திருநாகேஸ்வரம் நகர செயலாளர் வைரவேல் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தவமணி, ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ஆர்கே. பாரதிமோகன் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டுடாவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கழக துணைச் செயலாளர் கூகூர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட செயலாளர் டெல்லி சாமிநாதன் ஒன்றிய பொருளாளர் ராஜகுரு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜானகிராமன் மாவட்ட பிரதிநிதி வடிவேலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரகுமார் மனோகரன் மகளிர் அணி நிர்வாகிகள் மல்லிகா, ஜெயலலிதா, சத்தியா மற்றும் ஏராளமான ஒன்றிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். திருநாகேஸ்வரம் நகர அவை தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.