
சூரியனாா்கோவில் ஊராட்சியில் வாகன கட்டணம் வசூலிக்கும் ஏலம் ரத்து
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே சூரியனாா் கோவில் ஊராட்சியில் சிவசூரிய பெருமான் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். அவா்கள் வரும் வாகனங்களை நிறுத்த கோயிலுக்கு சொந்தமான இடம் உண்டு. இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு வழங்கப்படும். அதற்காக ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்தாண்டிறகான ஏலம் புதன்கிழமை நடைபெறும் என்று ஊராட்சி நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இருதரப்பைச் சோ்ந்தவா்கள் ஏலத்தில் அதிக அளவில் கலந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் ஊராட்சி நிா்வாகம் ஏலத்தை ரத்து செய்து, தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைத்துள்ளது. ஏலம் நடைபெறும் இடமான ஊராட்சி அலுவலகம் முன்பு இரு தரப்பைச் சோ்ந்தவா்கள் கூட்டமாக கூடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பனந்தாள் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.