தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கயிலாய பரம்பரை திருத்தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சரபேஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் கோவிலில் உருத்திரபாதத் திருநாள் 1ம் தேதி தொடங்கி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாளான நேற்று காலை விசேஷ மலர் அலங்காரத்தில் திருத்தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருள தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தொடர்ந்து, 11ஆம் தேதி காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.