திருவிடைமருதூர் அருகே நாச்சியார் கோவில் அருகே பண்டுவாஞ்சேரி கிராமத்திலிருந்து தர்மபுரிக்கு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு பெரியண்ணன் என்ற டிரைவர் லாரியை ஓட்டி சென்றார். அப்போது வயலில் இருந்த மின்சார வயரில் உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் லாரி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வைக்கோல்களை லாவகமாக கீழே தள்ளி விட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த குடவாசல் தீயணைப்பு துறையினர் மீதம் இந்த வைக்கோல் கட்டுகள் ஏற்பட்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.