ஆடுதுறையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதாகப் புகாா்

57பார்த்தது
ஆடுதுறை பகுதி ரேஷன் விலை கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை தரமற்ற அரசு விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் மருத்துவக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தில் உள்ள அங்காடி எண் 1 - இல் வழங்கப்பட்ட அரிசியில் புழுக்கள், வண்டுகள் இருந்தன. இதுபற்றி நியாயவிலை கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் வட்ட வழங்கல் துறை, நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் ஒதுக்கப்பட்ட அரிசியைத்தான் வழங்குகிறோம் என்றனர். தகவலறிந்து வந்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம. க. ஸ்டாலின் அந்த அரிசியை ஆய்வு செய்து, கைப்பேசி மூலம் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் பேசி, அந்த அரிசி மூட்டைகளை திரும்ப எடுத்துக்கொண்டு வேறு அரிசி வழங்கக் கேட்டுக் கொண்டார். அதிகாரியும் அதற்கு உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி